தேர்தல் பணப்பட்டுவாடாவை சொல்லும் தப்பு தண்டா

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (12:30 IST)
தேர்தல் நேரத்தில் நடக்கும் பணப்பட்டுவாடாவையும், அதனை பிடிக்க தேர்தல் அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் பின்னணியாக வைத்து தப்பு தண்டா படம் தயாராகி வருகிறது.


 
 
இந்தப் படத்தின் முதல்பாதி டார்க் காமெடியாகவும், இரண்டாவது பாதி க்ரைம் த்ரில்லராகவும் இருக்கும் என்றார், படத்தின் இயக்குனர் ஸ்ரீகண்டன். இவர் பாலுமகேந்திராவின் சிஷ்யர்.
 
சத்யா, ஸ்வேதா என்ற புதுமுகங்கள் படத்தின் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர். விசாரணை படத்தில் மிரட்டிய மொட்டைத்தலை அஜய் கோஷ் இதிலும் போலீசாக தனது மிரட்டலை தொடர்கிறார். 
 
தப்பு தண்டாவின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இன்னும் சில காட்சிகளை எடுத்தால் படம் ரிலீஸுக்கு தயாராகிவிடும் என்றார் இயக்குனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்