ஜோதிகா படத்தில் ரீஎன்ட்ரியாகும் பானுப்ரியா

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (11:20 IST)
முன்னாள் நாயகி பானுப்ரியா ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் மூலம் ரீ என்ட்ரியாகிறார்.


 
 
முன்னாள் நாயகிகள் பலர் இப்போது தொலைக்காட்சி தொடர்களில் பிஸியாக உள்ளனர். சிலர் குடும்பம், குழந்தை என செட்டிலாகிவிட்டனர். எதுவாக இருப்பினும், அவர்களின் கடந்தகால நடிப்பு வாழ்க்கை நிகழ்காலத்திலும் மனதில் நிழலாடிக் கொண்டுதான் இருக்கும். வாய்ப்பு கிடைக்கையில் அது வெளியே வரும்.
 
பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் படத்தில் பானுப்ரியா முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளார். இது அவரது ரீ என்ட்ரி. பானுப்ரியாவுடன் ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் முக்கிய வேடமேற்கிறார்கள்.
 
பெண்களையும், அவர்களின் பிரச்சனைகளையும் மையப்படுத்தி இந்தப் படம் தயாராகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 
அடுத்த கட்டுரையில்