துல்கர் சல்மான் படத்திற்கு அரபு நாடுகளில் தடை ! ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (16:42 IST)
ஏற்கனவே துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான குரூப் படத்திற்கு அரபு நாடுகள் தடை விதித்த நிலையில் அவரது புதிய படத்திற்கும் அரபு நாடுகளில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகனும் நடிகருமான துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் வாயை மூடி பேசவும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட படங்கள் வெளியானது.

இப்படங்களைத் தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது துல்கர் சல்மானின் சீதா ராமம் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தை ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் துல்கருடன் ராஷ்மிகா மந்தனா, மிருனாள் தாகுர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சில நாட்களான இப்படத்தின் புரோமோசன் நிகழ்ச்சி நடந்து வரும் நிலையில், இப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், துல்கர் சல்மான் நடிப்பில் உலகளவில் ரிலீஸாகவுள்ள சீதாராமம் படத்திற்கு அரௌ நாடுகள் தடை விதித்துள்ளன.

இப்படத்தில், மதம் சார்ந்த சில விசயங்கள் உள்ளதால், சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட  நாடுகள் இப்படத்திற்கு தடை விதித்துள்ளன.

மலையாளிகள் அதிகம் வசிக்கும் இந்த  நாடுகளில் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளதால் வசூல் பாதிக்கும் என மீண்டும் படக்குழு இப்படத்தை ஸ்ன்சாருக்கு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்