டிரைலரில் என் குரல் இல்லை… ஆனா படத்தில் நான்தான் டப்பிங் – லக்கி பாஸ்கர் படம் பற்றி துல்கர் சல்மான்!

vinoth
புதன், 23 அக்டோபர் 2024 (14:19 IST)
தமிழ் மற்றும் தெலுங்கில் தனுஷ், சம்யுக்தா ஆகியோர் நடிப்பில் உருவான் வாத்தி படத்தை தெலுங்கு இயக்குனரான வெங்கட் அட்லூரி இயக்கி இருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இந்த படம் வசூல் ரீதியாகக் வெற்றிப்படமாக கருதப்பட்டது. இதையடுத்து வெங்கட் இயக்கும் அடுத்த பேன் இந்தியா படமான லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.

இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. பீரியட் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் வங்கி ஊழியராக துல்கர் சல்மான் நடிக்கிறார். படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு இந்த படம் அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இதையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. அதில் துல்கர் சல்மான் கதாபாத்திரத்துக்கு அவர் டப்பிங் பேசாமல் வேறொருவர் பேசியிருந்தார். அதுபற்றி பேசியுள்ள துல்கர் “கண்டிப்பாக படம் ரிலீஸாகும் போது தமிழில் என் குரல்தான் இருக்கும். நான் அதற்குள் டப்பிங் பேசிவிடுவேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்