ஸ்ரீதேவி மரணம் குறித்த வதந்தி; இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்த துபாய் ஊடகம்

Webdunia
செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (15:08 IST)
ஸ்ரீதேவி மரணம் குறித்து யூகத்தின் அடிப்படையில் இந்தியாவில் வெளியாகும் செய்திகளுக்கு துபாய் ஊடகமான கலீஜ் டைம்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 
நடிகை ஸ்ரீதேவி துபாயில் மரணமடைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதலில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் தடயவியல் அறிக்கையில் அவர் பாத் டப் நீரில் மூழ்கி மரணமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது ஆல்கஹால் கலந்திருந்தப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஸ்ரீதேவி மரணத்தில் தெளிவான தகவல்கள் வெளியாகாத காரணத்தினால் அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. பாத் டப்பில் அவரது எப்படி மூழ்கி இறந்திருப்பார் என இந்திய ஊடகங்கள் யூகத்தின் அடிப்படையில் விதவிதமாக செய்திகள் வெளியிட தொடங்கின.
 
சில ஊடகங்கள் அவரை பாத் டப்பில் ஸ்ரீதேவியை யாராவது மூழ்கடித்திருக்க வாய்ப்புள்ளது என்று செய்திகள் வெளியிட்டனர். இதுபோன்ற செய்திகளுக்கு துபாய் ஊடகம் கலீஜ் டைம்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எவ்வாறு ஊடகங்களால் ஒரு மரணம் குறித்து முடிவு செய்ய முடிகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்