பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான "டிராகன்" என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த படம், வெளியான 10 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ள நிலையில், ஏற்கனவே பல திரை உலக பிரபலங்கள் இந்த படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அந்த வகையில், ரஜினிகாந்த் டிராகன் படக்குழுவினரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து பாராட்டியதாகவும், குறிப்பாக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவை மிகவும் பாராட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியபோது, “அற்புதமா எழுதியிருக்கீங்கன்னு ரஜினி சார் பாராட்டினார். நல்ல படம் பண்ணனும், படத்தைப் பார்த்துட்டு ரஜினி சார் நம்மளை வீட்டுக்குக் கூப்பிட்டு பேசணும்.. இதெல்லாம் இயக்குநர் ஆகணும்னு உழைக்கிற பல உதவி இயக்குநர்களோட கனவு. கனவு நிறைவேறிய நாள் இன்று” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
கடந்த பல வருடங்களாக, ரஜினிகாந்த் சின்ன பட்ஜெட் படங்களை இயக்கும் இயக்குனர்களுக்கு பாராட்டு தெரிவித்து, ஊக்கம் அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.