டிராகன் படத்துக்கு முன்னால் எடுபடாத தனுஷின் ‘NEEK’.. காட்சிகள் குறைப்பு!

vinoth

செவ்வாய், 25 பிப்ரவரி 2025 (07:41 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை அடுத்து தனுஷின் இயக்கத்தில்  மூன்றாவது படமாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம் உருவானது. இந்த படத்தில் தனுஷின் அக்கா விமலகீதாவின் மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். தற்கால 2 கே கிட்ஸ் இளைஞர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் காதலைப் பற்றிய படமான ‘NEEK’ கடந்த வாரம் டிராகன் படத்துடன் ரிலீஸானது.

இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் பவிஷுடன், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யு தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் என பலர் நடித்திருந்தனர். ரிலீஸுக்கு முன்பு இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்த போதும் ரிலீஸுக்குப் பின்னர் ரசிகர்களைப் பெரிதாகக் கவரவில்லை.

அதுமட்டுமில்லாமல் போட்டியாக வெளியான டிராகன் படம் அதிரி புதிரி ஹிட் ஆனதால் இந்த படத்திற்கு செல்லும் கூட்டம் பெருமளவு சரிந்தது. இதனால் பெருவாரியான திரைகளில் இந்த படம் தூக்கப்பட்டு அதிலும் டிராகன் ஓடி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்