ஏழை மாணவியின் டாக்டர் கனவை நனவாக்கிய ’’டாக்டர்’’ சிவகார்த்திகேயன்

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (20:54 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த செலவில் தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவி சஹானாவுக்கு நீட் தேர்வில் பயிற்சியில் படிக்க வைத்தார். இந்நிலையில் அவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

கடந்தாண்டு பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையிலும் அவரது வீட்டில் அவரை மேற்படிப்பு படிக்க வைக்க முடியாத சூழ்நிலை இருந்தது.

இதையறிந்த நடிகர் சிவகார்த்திகேயன்,  மாணவி சஹானாவுக்கு நீட் பயிற்சிக்கான மொத்த செலவையும் நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றிருந்தார்.

இந்நிலையில் சஹானாவுக்கு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
மாணவி சஹானாவுக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவிட்து வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன்  தற்போது டாக்டர் படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்