முதன்முறையாக பெருவுடையாருக்கு தமிழில் வழிபாடு! – சதயவிழாவில் மகிழ்ச்சி நிகழ்வு

திங்கள், 26 அக்டோபர் 2020 (14:11 IST)
தஞ்சாவூரில் ராஜராஜசோழனுக்கு சதயவிழா நடைபெற்று வரும் நிலையில் மூலவரான பெருவுடையாருக்கு தமிழில் வழிபாடு நடத்திய ட்ரெண்டாகியுள்ளது.

சோழ பேரரசர்களில் சிறந்தவராகவும், தஞ்சை பெரிய கோவிலை கட்டியவராகவும் அறியப்படும் ராஜராஜசோழன் என்றழைக்கப்படும் அருள்மொழிவர்மனுக்கு 1035வது சதயவிழா இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

முன்னதாக தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது தமிழ் மன்னனான ராஜராஜசோழன் கட்டிய கோவிலுக்கு தமிழிலேயே குடமுழுக்கு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அந்த சமயம் இது பெரும் பிரச்சினையாகவும் மாறி பலர் தமிழில் குடமுழுக்கு நடத்த சொல்லி வந்த நிலையில், சுமூகமாக விழாவை நடத்தும் வகையில் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் இரு மொழிகளிலும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது சதயவிழா நடைபெற்று வரும் சூழலில் மூலவரான பெருவிடையாருக்கு தமிழில் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி முதன்முறையாக வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. இது தமிழ் பற்றாளர்களையும், பக்தர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்