சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் பற்றி பேச வேண்டாம் - தயாரிப்பாளர் !

Webdunia
புதன், 12 மே 2021 (17:03 IST)
சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் ரிலீஸ் குறித்து இப்போது பேச வேண்டாமென இப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், யோகிபாபு, ரோபோ சங்கர்,  அர்ச்சனா உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் டாக்டர்.

டாக்டர் படம் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், வரும் மே மாதம் 2  வாரம் கோடைக்காலத்தில் ரம்ஜான் பண்டிகையொட்டி ரிலீசாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது தமிழகத்தில் கொரொனா வைரஸ் இரண்டாம் அலைப்பரவால் தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஓடிடியில் இப்படம் வெளியாகும் எனக் கூறப்பட்டது.

அதையும் தாண்டி ரசிகர்கள் டாக்டர் படம் எப்போது ரிலீஸாகும் என இயக்குநரிடம் அப்டேட் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ஸ்டுடியோ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், டாக்டர் படத்தின் எல்லாப் பணிகளும் முடிவடைந்து, ரிலீஸிக்கு தயாராக உள்ளது. இக்கொரோனா காலத்தில் படத்தை வெளியிட முடியாவில் பல பொருளாதாரப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறேன். நான் இப்படத்தை ரிலீஸ் செய்ய எல்லா முயற்சிகளையும் எடுத்துவருகிறேன். ஆனால் நம் நண்பர்களையும், சுற்றங்களையும் இழந்துவரும் இந்தச் சூழலில் தற்போதைக்கு டாக்டர் படம் ரிலீஸ் குறித்து நான் பேசவிரும்பவில்லை எனக் கூறி அனைவரையும் கொரொனா காலத்தில் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்