சோலோவை சாகடிக்காதீர்கள்; உருகிய துல்கர் சல்மான்

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2017 (14:22 IST)
பிஜாய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சோலோ திரைப்படம் குறித்து துலகர் சல்மான தனது உருக்காமான கருத்தை பதிவு செய்துள்ளார்.


 

 
பிஜாய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து வெளியான திரைப்படம் சோலோ. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு மொழிகளில் வெளியாகியுள்ளது. சோலோ குறித்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. படம் வெளியான பின் கிளைமேக்ஸ் காட்சி மாற்றிப்பட்டுள்ளது. 
 
சோலோ திரைப்படம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் தனது உருக்கமான கருத்தை பதிவு செய்துள்ளார். சோலோவை கொன்றுவிடாதீர்கள், கெஞ்சிக் கேட்கிறேன் எனறு கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
சோலோ நான் நினைத்துப் பார்த்ததைவிட நன்றாக வந்திருக்கிறது. படத்தின் ஒவ்வொரு நொடியையும் ரசித்தேன். சேகர் பாகத்தை கொஞ்சம் நீட்டித்திருக்கலாம். பிஜாய் நம்பியார் மனதில் நினைத்ததை அப்படியே படத்தில் கொண்டு வந்திருக்கிறார்.
 
தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். எனக்கு இதுதான் பிடித்திருக்கிறது. ரசிகர்களில் சிலருக்கு வித்தியாசத்தை பிடிக்வில்லை. சோலோ படத்தில் எனக்கு மிகவும் பிடித்த ருத்ராவின் கதையைப் பற்றி சிலர் கிண்டல் செய்யும்போது மனது வலிக்கிறது.
 
நீங்கள் கொடுத்த ஊக்கத்தை நீங்களே நொறுக்குவதா. எனவே உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். சோலோவை சாகடிக்காதீர்கள். நான் எப்போதும் இயக்குநர் பிஜாய் நம்பியார் மற்றும் அவரது படத்தின் வடிவத்துக்கு ஆதரவாக இருக்கிறேன் என்றார்.
 
படம் வெளியான பிறகு செய்யப்பட்ட மாற்றம் இயக்குநரின் அனுமதியில்லாமல் நடைப்பெற்றது. இதனால் துல்கர் சல்மான் படத்தில் மீண்டும் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டாம் என்பதை உருக்குத்துடன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்