அனைத்து தியேட்டர்களுக்கும் சென்ற KDM… டான் படத்துக்காக லைகா எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

Webdunia
வியாழன், 12 மே 2022 (14:48 IST)
டான் படத்தின் ரிலீஸை முன்னிட்டு உலகமெங்கும் உள்ள திரையரங்குகளுக்கு KDM அனுப்பப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி உள்ளது. இந்த டிரைலரில் சிவகார்த்திகேயன் காமெடி காட்சிகள் ரொமான்ஸ் காட்சிகள் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக உள்ளன என்பதும் இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உள்ளது.

இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில் உலகமெங்கும் நாளை ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இன்றே திரையரங்குகளுக்குக் கொடுக்கப்படும் KDM கொடுக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கபப்ட்டுள்ளது. சமீபகாலமாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் கடைசி நேர ரிலீஸ் பிரச்சனைகளை சந்திக்கின்றன. அதனால் இந்த முறை எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக லைகா நிறுவனமே ஒருநாள் முன்பே KDM அனுப்பிவிட்டதாக சொல்லப்படுகிறது. KDM என்பது (KEY DELIVERY MESSAGE) திரையரங்குகளுக்கு தயாரிப்பாளர் சார்பாக அனுப்பப்படும் பாஸ்வேர்ட் போன்றது. இதன் மூலமாகவே திரையரங்குகளில் படங்களை திரையிட முடியும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்