தளபதி விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. இப்போது சென்னையில் இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தை முடிப்பதற்கு அடுத்தப்படத்திற்கான ஒப்பந்தத்தில் விஜய் கையெழுத்து போட்டுவிட்டாராம்.
அதன்படி வெங்கட் பிரபு விஜய்யின் அடுத்த படமான தளபதி 68 படத்தை இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லபடுகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிக்க நடிகர் விஜய் ரூ. 125 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறாராம். விரைவில் இப்படத்திற்கான வேலைகள் துவங்கி அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்க முடிகிறது.