லியோ படத்தில் சஞ்சய் தத்துக்கு குரல் கொடுக்கும் விஜய் சேதுபதி!

புதன், 17 மே 2023 (08:38 IST)
விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய் இரண்டு கெட்டப்களில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. டைட்டில் ரோலான லியோ கதாபாத்திரத்திலும் பார்த்திபன் என்ற மற்றொரு கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இரண்டு வேடமா அல்லது ஒரே கதாபாத்திரத்தின் வெவ்வேறு காலகட்ட கெட்டப்பா என்பது பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

இந்த படத்தில் லோகேஷ் கனகராஜின் ஆஸ்தான நடிகரான விஜய் சேதுபதி நடிக்க வில்லை. ஆனால் அவரின் பங்களிப்பு படத்தில் இடம்பெற உள்ளதாம். படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கும் சஞ்சய் தத்துக்கு பின்னணிக் குரல் கொடுக்க உள்ளாராம் விஜய் சேதுபதி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்