தூத்துக்குடி துப்பாக்கி சூடு : இயக்குனர்கள் சங்கம் கண்டனம்

Webdunia
வெள்ளி, 25 மே 2018 (16:24 IST)
ஸ்டெர்லைட் அலையை மூட கோரி தூத்துகுடியில் நடந்த  போராட்டத்தில்  போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இணையதள சேவைகள் முடக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு நிலைமை வெகுவாக சீரடைந்து வருகிறது.
 
இந்நிலையில் தூத்துக்குடியில் நடந்த தூப்பாக்கி சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்” தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் 13 அப்பாவி மக்கள் உயிர்களை இழந்ததற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும்,  துப்பாக்கி சூட்டிற்கு காரணமான காவல்துறையின் அராஜக செயலை வன்மையாக கண்டிக்கிறோம். 
 
தூத்துக்குடி நகர மக்கள் 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வருகின்றனர். ஆனால், இதுவரை அதற்கான சரியான தீர்வு இல்லை. ஸ்டெர்லைட் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண அந்த ஆலையை மூடிவிட வேண்டும். அதற்கான வழிமுறைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இயக்குனர்கள் சங்கம் சார்ர்பில் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்