தமிழ் சினிமாவில், பழம்பெரும் வசன கர்த்தா மற்றும் பாடலாசிரியர் ஆரூஸ்தாஸ். இவர், சிவாஜி, சாவித்தி நடித்த பாசமலர், வேட்டைக்காரன் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் எழுதி சாதனை படைத்துள்ளார்.
பெண் என்றால் பெண் என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, உள்ளிட்ட சினிமா ஜாம்பாவங்களுடன் பணிபுரிந்து 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை அமைத்துள்ளார். இதில், பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் படங்கள் ஆகும்.
இந்த நிலையில், சென்னையில் வசித்து வந்த அவர் இனஇந்த நிலையில், சென்னையில் வசித்து வந்த அவர் இந்த நிலையில், சென்னையில் வசித்து வந்த அவர் வயது மூப்பின் காரணமாக நேற்று மாலை உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு, சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் கூறி டிவீட் பதிவிட்டிருந்தார்.
தற்போது, நடிகர் கமல்ஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில், ஆயிரக்கணக்கான கதாபாத்திரங்களுக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தவர்; என் ஆசிரியர்களுக்கும், எனக்கும், அடுத்து வந்தவர்களுக்கும்கூட வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ் அவர்கள். அவரது மறைவுக்கு இதயப்பூர்வமான அஞ்சலி என்று தெரிவித்துள்ளார்.