இயக்குனர் ஷங்கரின் தாயார் மறைவு: திரையுலகினர் இரங்கல்!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (20:30 IST)
இயக்குனர் ஷங்கரின் தாயார் மறைவு: திரையுலகினர் இரங்கல்!
பிரபல இயக்குனர் ஷங்கரின் தாயார் முத்துலட்சுமி என்பவர் சற்றுமுன் காலமானதாக செய்திகள் வெளிவந்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது 
 
வயது முதிர்வு காரணமாக ஷங்கரின் தாயார் முத்துலட்சுமி அவர்கள் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மறைந்த ஷங்கரின் தாயாருக்கு வயது 88 என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஷங்கரின் தாயார் சென்னையில் காலமானதை அடுத்து அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என்று தெரிகிறது. இந்தநிலையில் ஷங்கரின் தாயார் அவர்களின் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் நேரிலும் தொலைபேசியிலும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஷங்கரின் தாயார் ஆன்மா சாந்தி அடையவும் அவர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்