ஓடிடியில் 99 சாங்ஸ்: ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (18:57 IST)
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் எழுதி இசை அமைத்து தயாரித்த திரைப்படம் ’99 சாங்ஸ்’ இந்த படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆன நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது 
 
ஆனால் படம் ரிலீஸ் ஆன ஒரு சில நாட்களில் கொரோனா வைரஸ் காரணமாக பல திரையரங்குகள் மூடப்பட்டதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் சற்று முன்னர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டரில் ’99 சாங்ஸ்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலை அறிவித்துள்ளார் 
 
‘99 சாங்ஸ்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாவது குறித்த முழு விவரங்கள் நாளை மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியாகும் என்று அவர் ட்வீட் செய்துள்ளார். இந்த டுவிட் காரணமாக அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்க முடியாத பல ரசிகர்கள் ஓடிடியில் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன என்பதும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்