ரத்னகுமாரை கழட்டிவிட்ட லோகேஷ்… இப்ப இந்த இயக்குனரிடம்தான் ஐக்கியமாம்!

vinoth
புதன், 31 ஜனவரி 2024 (08:22 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகி ஹிட் அடித்துள்ள படம் லியோ. இந்த படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் விஜய், அர்ஜூன், கௌதம் மேனன், த்ரிஷா என பல பிரபலங்களும், ரசிகர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய படத்தின் இணை இயக்குனர்களில் ஒருவரான ரத்னகுமார், ரஜினியை மறைமுகமாக கிண்டல் செய்து பேசியது முகம் சுளிக்க வைத்தது. இதனால் லோகேஷ் இப்போது ரஜினியை வைத்து இயக்கும் படத்தில் ரத்னகுமார் கழட்டிவிடப்பட்டுள்ளார் என சொல்லப்படுகிறது. அதே போல லோகேஷ் தயாரிப்பில் அவர் லாரன்ஸை வைத்து இயக்க இருந்த படமும் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

இந்நிலையில் இப்போது பி எஸ் மித்ரன் இயக்கும் சர்தார் 2 படத்தில் அவர் இணைந்து பணியாற்றி வருவதாக சொல்லப்படுகிறது. அந்த படத்துக்கான வசனங்களை எழுதும் பொறுப்பை அவர் ஏற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்