தொடங்கியது இயக்குனர் ராமின் அடுத்த பட படப்பிடிப்பு… சுரேஷ் காமாட்சி வெளியிட்ட புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (10:00 IST)
இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் அஞ்சலி நடிப்பில் ஒரு படம் உருவாக உள்ளதால சில வாரங்களுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியானது.

இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை தயாரிக்கும் முனைப்பில் உள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளிலும் ரிலிஸாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சூரி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படம் இந்த மூன்று கதாபாத்திரங்களை சுற்றியே நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று அந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி ஆகிய மூவரும் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் தொடங்கியுள்ளது.

இது சம்மந்தமாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘நண்பர்களுக்கு வணக்கம்... மாநாடு திரைப்படத்தைத் தொடர்ந்து, மக்களின் இயக்குநர் ராம் இயக்கத்தில் மலையாளம், தமிழ் இரண்டிலும் இளையோர்களின் மனதைக் கொள்ளையடித்த நிவின் பாலி ஹீரோவாக நடிக்க, அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார்.

இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் உங்கள் அன்பினாலும் ஆசிகளாலும் தொடங்கியுள்ளோம். விஹவுஸ் புரொடக்ஷன்ஸின் ஏழாவது தயாரிப்பாக உருவாகிறது. யுவனின் இசை. ஏகாம்பரம் ஒளிப்பதிவு. உமேஷ் ஜே குமார் கலை. மக்கள் தொடர்பு A. ஜான். பரபரப்பான படப்பிடிப்பில் படம் நகரும். இப்படத்தையும் உங்கள் மனதுக்கு நெருக்கமான படமாக விரைவில் கொண்டு வருவோம். உடன் நிற்கும் அனைவருக்கும் நன்றிகள்.’ எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்