மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களின் படம் தான் ‘ஜிப்ஸி’: ராஜூமுருகன்

Webdunia
புதன், 4 மார்ச் 2020 (21:31 IST)
மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களின் படம் தான் ‘ஜிப்ஸி’
ஜோக்கர், குக்கூ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராஜுமுருகன் இயக்கிய அடுத்த திரைப்படம் ‘ஜிப்ஸி. இந்த திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்து ராஜமுருகன் பேட்டி அளித்தபோது, ‘அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் சென்சார் போர்டு உறுப்பினர்களாக இருக்க கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளார் 
 
ஜிப்ஸி திரைப்படம் சென்சார் செல்லும் போது ஏகப்பட்ட கெடுபிடிகள் இருந்ததாகவும் இதனை அடுத்து டிரிபியூனல் வரை சென்று சான்றிதழ் பெற்று வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தணிக்கையில் எழுந்த பல்வேறு சிக்கல்கள் குறித்து கருத்து கூறிய இயக்குனர் ராஜமோகன் ’டெல்லியில் தற்போது நடந்து வரும் வன்முறைகளை ஜிப்ஸி படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டது எனவே இந்த படம் சரியான நேரத்தில் வெளியாகிறது என்பது எனக்கு சந்தோசம் 
 
மதம் என்பது அவரவர் விருப்பம். மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களை தான் இந்த படத்தில் சுட்டிக் காட்டி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். சென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகளை சேர்த்து முழுநீள திரைப்படத்தை டிஜிட்டலில் வெளியிடுவோம் என்றும் தணிக்கை குழுவில் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் இருக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார் இந்த படம் இன்று பத்திரிக்கையாளர் இதற்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது என்பதும் பத்திரிகையாளர்கள் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்