இவர்கள்தான் என் நிஜ வாழ்க்கை மெய்யழகன்கள்… இயக்குனர் பிரேம்குமார் பகிர்ந்த புகைப்படம்!

vinoth
புதன், 30 அக்டோபர் 2024 (12:13 IST)
கார்த்தி மற்றும் அரவிந்த்சுவாமி நடிப்பில் இயக்குனர் பிரேம்குமார் இயக்கியுள்ள மெய்யழகன் படம் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. ஆக்‌ஷன் காட்சிகள் இல்லாமல் மெல்லிய உணர்வு கொண்ட குடும்ப உறவுகள் பற்றிய படமாக உருவாகியிருந்த மெய்யழகன் திரைப்படம் பெருவாரியான ரசிகர்களைக் கவர்ந்தது.

ஆனால் படம் பற்றி நெகட்டிவ் விமர்சனங்களும் வராமல் இல்லை.  படம் ஆமை வேகத்தில் நகர்வதாகவும், படம் முழுவதும் இரண்டு கதாபாத்திரங்களும் பேசிக் கொண்டே இருப்பது ஒரு மெகா சீரியல் உணர்வை ஏற்படுத்துவதாகவும் சில எதிரமறை விமர்சனங்களும் எழுந்துள்ளன. மேலும் கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் கதாபாத்திரம் போன்ற ஒருவர் நிஜ வாழ்க்கையில் இருக்க முடியாது. அது ஒரு உடோபியன் கதாபாத்திரம் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இயக்குனர் பிரேம்குமார் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் “என்னுடைய நிஜ வாழ்க்கை மெய்யழகன்கள் ப்ளம்பர் மூர்த்தி அண்ணாவும், இயக்குனர் மருதுபாண்டியன்” என அவர்களோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்