கூல் சுரேஷ் வெடிக்கும் மஞ்சள் வீரன்… தீபாவளியை முன்னிட்டு புது போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

vinoth

புதன், 30 அக்டோபர் 2024 (12:21 IST)
டிடிஎஃப் வாசன் நடிப்பில்  சில வருடங்களுக்கு முன்னர் மஞ்சள் வீரன் என்ற படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. ஆனால் போஸ்டர் வெளியானதோடு சரி, படத்தின் ஷூட்டிங் ஒருநாள் கூட நடக்கவில்லை என சொல்லப்பட்டது. இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி படத்தில் இருந்து வாசனை நீக்கிவிட்டோம் என அறிவித்தார் படத்தின் இயக்குனர் செல்அம்.

படத்துக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்பதால்தான் அவரை நீக்கியதாக செல்அம் தெரிவித்தார். இதையடுத்து தன்னிடம் சொல்லாமல் எப்படி பத்திரிக்கையாளர்களிடம் அறிவிக்கலாம் எனக் கோபப்பட்டு பேசியிருந்தார் வாசன். அதையடுத்து படத்தின் ஹீரோவாக கூல் சுரேஷ் அறிவிக்கப்பட்டார்.

சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி அதை அறிவித்தனர் படக்குழுவினர். இந்நிலையில் இப்போது கூல் சுரேஷ் காளையோடு இருக்கும் புதிய போஸ்டரை வெளியிட்டு தீபாவளி வாழ்த்துகளை வெளியிட்டுள்ளது படக்குழு. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்