ரஜினி சார் கருத்தில் எனக்கு விமர்சனம் இருக்கிறது… இயக்குனர் பா ரஞ்சித்!

vinoth
செவ்வாய், 23 ஜனவரி 2024 (07:49 IST)
ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அயோத்தி சென்றார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது 500 வருடங்களாக போராடி ராமர் கோயில் தற்போது தான் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ராமர் கோவிலில் விசேஷத்தில் கலந்து கொள்வதில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார். மேலும் 500 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் இந்த கருத்தில் தனக்கு விமர்சனம் உள்ளதாக இயக்குனர் பா ரஞ்சித் கூறியுள்ளார். ஜனவரி 25 ஆம் தேதி பா ரஞ்சித் தயாரித்துள்ள அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு உள்ளிட்டவர்கள் நடித்துள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜெயக்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது.

அப்போது பத்திரிக்கையாளர்கள் இடையே பேசிய அவர் “ 500 ஆண்டுகால பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளதாக ரஜினி சார் கூறியிருக்கிறார். ஆனால் அதன் பின்னுள்ள அரசியலைக் கேள்வி கேட்க வேண்டியுள்ளது. அவர் சொன்ன கருத்து சரி தவறு என்பதைத் தாண்டி எனக்கு அதில் விமர்சனம் உள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்