பாலாவின் வணங்கான் படத்தில் நடிகராக இணைந்த மிஷ்கின்?

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2023 (11:02 IST)
சூர்யா நடித்து, தயாரித்து இயக்குனர் பாலா இயக்கத்தில் 40 நாட்கள் வரை ஷூட்டிங் நடந்த வணங்கான் திரைப்படத்தில் ஒரு கட்டத்தில் சூர்யா விலகிவிடவே, இப்போது அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இப்போது முக்கிய வேடத்தில் நடிக்க சமுத்திரக்கனியும் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது வணங்கான் படத்தை இயக்குனர் பாலாவே தயாரித்து வருகிறார்.

வணங்கான் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்தாலும், அந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய தகவல் எதையும் வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளது படக்குழு.

இந்நிலையில் இப்போது இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் அந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பாலா தயாரிப்பில் மிஷ்கின் பிசாசு படத்தை சில ஆண்டுகளுக்கு இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்