அமலாக்கத்துறையினரிடம் தயிர் சாதம் கேட்ட செந்தில் பாலாஜி.. தினமும் 9 மணி நேரம் விசாரணை..!

புதன், 9 ஆகஸ்ட் 2023 (07:41 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை செய்து வரும் நிலையில் நேற்று அவர் மதிய சாப்பாட்டிற்கு தயிர் சாதம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.  
 
நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.  அவருடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு இரவில் விசாரணை செய்ய வேண்டாம் என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 
 
இருப்பினும் அவர் பகலில் கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் விசாரணை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் செந்தில் பாலாஜி சாப்பிடுவதற்கு மினி மில்ஸ் கொடுத்த நிலையில் அவர் தயிர்சாதம் தான் வேண்டும் என்று கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.  
 
செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை செய்தவர் என்பதால் விசாரணை நடக்கும் இடத்திற்கு வெளியே இரண்டு இ.இஎஸ்.ஐ மருத்துவர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அவர்கள் செந்தில் பாலாஜியின் ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்