உட்கார்ந்து கொண்டு போட்டோ எடுத்த ரஜினிக்கு எழும்பி நிற்க தெம்பு இருக்கா!

Webdunia
திங்கள், 22 மே 2017 (13:39 IST)
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை 9 வருடங்களுக்கு முன்னர் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த சந்திப்பின் போது அவர் அதிகமாக அரசியல் குறித்து பேசியதால் அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


 
 
இதனையடுத்து அவரது அரசியல் பிரவேசம் குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். சினிமா துறையில் உள்ளவர்களே அவரது அரசியல் பிரவேசத்தை எதிர்க்கின்றனர். முன்னதாக சீமான் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என விமர்சித்தார்.
 
தற்போது தமிழ் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த இயக்குநர் களஞ்சியமும் ரஜினியை கடுமையாக விமர்சித்துள்ளார். ரஜினியின் ரசிகர்கள் எல்லாம் 60 வயதை தாண்டியவர்கள் தான் இளைய தலைமுறை ரசிகர்கள் அவருக்கு அதிகமாக இல்லை. மூன்று தலைமுறை ரசிகர்கள் அவருக்கு இருப்பதாக ஊடகங்கள் தான் கூறுகின்றன.
 
மாற்றத்தைக் கொண்டுவருவேன் என்று சொன்ன விஜயகாந்த் தற்போது இருக்கின்ற இடம் தெரியாமல் போய்விட்டார். விஜயகாந்தைப்போல ரஜினியால் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் போக முடியுமா? ரசிகர்களுடன் போட்டோ எடுப்பதற்கே அவரால் நிற்க முடியாமல், உட்கார்ந்து கொண்டுதான் போட்டு எடுக்கிறார்.
 
தன்னை பச்சை தமிழன் என கூறும் ரஜினி முதலில் சரியான தமிழில் பேசட்டும், தமிழர் உடையை உடுத்தட்டும். அவர் உடுத்துவதெல்லாம் கர்நாடக உடைகள் தான் என்றார் இயக்குநர் களஞ்சியம்.
அடுத்த கட்டுரையில்