தமிழ் சினிமாவில் நடிகர் , இயக்குனர் , தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டு சிறந்து விளங்கி வருபவர் நடிகர் தனுஷ். இவர் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார்.
2002ம் ஆண்டு வெளியான இப்படத்தில் அவரது தோற்றம் குறித்தும் , நடிப்பு குறித்தும் அவமதிக்கப்பட்டார். ஆனாலும் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து சுள்ளான் , புதுப்பேட்டை , காதல் கொண்டேன், பொல்லாதவன், அசுரன் என பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.
அத்துடன் பாலிவுட்டில் ராஞ்சனா படத்தின் மூலம் அறிமுகமாகி அங்கும் ஹிட் கொடுத்தார். பின்னர் அங்கு தனது இரண்டாவது படமே அமிதாப் பச்சனுடன் " சமிதாப்" என்ற படத்தில் நடித்து புகழ்பெற்றார். தற்ப்போது அத்ரங்கி ரே என்ற இந்தி படத்தில் அக்ஷய் குமாருடன் நடிக்கிறார். இந்த படத்தில் அமீர் கான் மகள் சாரா அலிகான் கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படி தொடர்ந்து தனது வளர்ச்சியை திறமையால் அதிகரித்துக்கொண்டிருக்கும் தனுஷ் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் , நண்பர்கள் , திரையுலகினர் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். அந்தவகையில் தற்ப்போது இயக்குனர் பாரதி ராஜா தனுஷிற்கு ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார் அந்த பதிவில்,
திரை மொழியை
மெளனமாய்
உடல் அசைவில்
உலகை அதிரவைத்த
ஒப்பற்ற நடிகன்.
தனுஷ்.
என் மண்ணின் மைந்தன்.
உன் அசுர நடிப்பை கண்டு இன்னும் வியக்கிறேன்.