பாடலாசிரியர் உழைப்பை திருடிய இயக்குனர்!

J.Durai

சனி, 26 அக்டோபர் 2024 (18:36 IST)
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள படம் ஜாலியோ ஜிம்கானா. காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் இருந்து இன்று பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் உருவாகியுள்ள ஒரு போலீஸ் காரன கட்டிக்கிட்டா என்ற பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
அதன் கேட்சியாக பாடல் வரிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த பாடலை இயக்குனர் சக்தி சிதம்பரம் எழுதியுள்ளதாக கூறப்படும் நிலையில் அதன் உண்மையான பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் என்பது நிதர்சனமான உண்மை. 
 
பத்திரிகையாளரான ஜெகன் கவிராஜ் ஜீரக பிரியாணி என்ற பாடலின் மூலம் அனைவராலும் ரசிக்கப்பட்ட இவர் தொடர்ந்து பாடல்கள் எழுதி வருகிறார். ஆனால் ஜாலியோ ஜிம்கானா படத்தில் இவர் எழுதிய‌ இந்த பாடலுக்கு இயக்குனர் சக்தி சிதம்பரம் உரிமை கொண்டாடி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒரு திறமையான கலைஞரின் உழைப்பை திருடுவது என்பது திரையுலகில் புதிதல்ல என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். 
 
ஆனால் ஒரு நல்ல கலைஞரின் உழைப்பு திருடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது என ரசிகர்கள் அந்த பாடல் வெளியான  யூடியூப் தளத்தில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 
 
இது குறித்து ஜெகன் கவிராஜுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்