தனுஷ் நடிக்கும் பாலிவுட் படத்தில் இணையும் முன்னணி நடிகை!

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2020 (17:04 IST)
பாலிவுட்டில் தனுஷ் நடிக்கும் மூன்றாவது படத்தில் முன்னணி நடிகையான டிம்பிள் ஹயாதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ராஞ்சனா என்ற படத்தின் மூலம் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமானார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.  அதன் பின்னர் அவர் ஷமிதாப் என்ற படத்தில் அமிதாப்புடன் இணைந்து நடித்தார். அந்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து பாலிவுட்டுக்கு ஒரு இடைவெளி விட்டார் தனுஷ். இந்நிலையில் சில வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்கிறார் தனுஷ்.

இந்த படத்தை அவரது முதல் படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். இந்த படத்தில்  தனுஷுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் அக்‌ஷ்ய் குமார் நடிக்க இருக்கிறார். கதாநாயகனாக நடித்து வரும் அக்‌ஷய் குமார் குணச்சித்திரப் பாத்திரத்தில் நடிப்பதற்காக 120 கோடி ரூபாய் சம்பளம் பெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகை டிம்பிள் ஹயாதி ஒப்பந்தமாகியுள்ளார். அக்டோபர் மாதத்தில் இந்த படத்தில் தனுஷ் நடிக்கும் காட்சிகளை மதுரையில் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்