ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பிறகு இந்திய சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக உருவாகியுள்ளார் ராம்சரண். இதையடுத்து அவர் நடித்ஹ கேம்சேஞ்சர் படத்தை ஷங்கர் இயக்க தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் செய்தனர்.
இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். தமன் முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் மிக அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி ரிலீஸானது. முதல் நாளில் மிகப்பெரிய ஓப்பனிங் இருந்தும் அதன் பின்னர் கலவையான விமர்சனங்களால் வசூலில் பெரிய வீழ்ச்சி இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கேம்சேஞ்சர் படத்துக்காக தனது சொத்தை ஒன்றை அடமானத்தில் வைத்திருந்தாராம் தயாரிப்பாளர் தில் ராஜு. தற்போது அந்த சொத்து அவரது கையை விட்டு சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.