பாலிவுட்-க்கு ஜூட் விட நிர்வாணமாக நடித்தாரா அமலா பால்?

Webdunia
வெள்ளி, 12 ஜூலை 2019 (20:42 IST)
பாலிவுட் படங்களில் நடிக்க ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்தேனா? என பதில் அளித்துள்ளார் அமலாபால். 
 
நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படத்தின் டிரெய்லர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவலானக் கவனத்தைப் பெற்றுள்ளது.
 
இந்தப் படத்தில் அமலா பால் ஆடையின்றி துணிச்சலான நடித்துள்ளதற்கு பாராட்டும் கிடைத்துள்ளது. தணிக்கை குழுவால் படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஜூலை 19 ஆம் தேதி வெளியக உள்ளது. 
இந்நிலையில் படம் குறித்து சமீபட்தில் பேட்டி அளித்த அமலா பாலிடம் பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு வர வேண்டும் என்பதற்காக நிர்வாண காட்சியில் நடித்தீர்களா என கேட்கப்பட்டது. 
 
இதற்கு அமலா பால் அதைப்பற்றியெல்லாம் நான் யோசிக்கவில்லை. ஆடை படத்தை பார்த்துவிட்டு இந்தி டைரக்டர்கள் அழைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்