இறைவி படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குவதாக கார்த்திக் சுப்பாராஜ் அறிவித்திருந்தார். இறைவி படம் தயாரிப்பாளர்கள் மத்தியில் ஏற்படுத்திய அதிருப்தியை தொடர்ந்து, கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு இருவருமே, தக்க பதில் அளித்திருந்தனர். அதாவது இருவரும் இணைவது உறுதி என தனுஷ், சுப்பாராஜ் இருவருமே உறுதிபட தெரிவித்தனர்.
அடுத்த வருடம் பிப்ரவரியில் இவர்கள் இணையும் படம் தொடங்கப்படும் என உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. இந்தப் படத்தின் பெரும்பகுதி யுஎஸ்ஸில் தயாராக உள்ளது. அதற்கான லொகேஷன்ஸ் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டன.
சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைக்க உள்ளார்.