தனுஷுக்கு வில்லனாக நடிக்க மறுத்த இசையமைப்பாளர் தேவா… அவரே சொன்ன காரணம்!

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (18:36 IST)
கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ள தனுஷ் அடுத்து தனது 50 ஆவது படத்தை தானே இயக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், திரிஷா, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  தற்போது இந்த படத்தின் ஷூட்டிங்கை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார் தனுஷ்.

இந்த படத்தில் வில்லனாக நடிக்க இசையமைப்பாளர் தேவாவை அணுகியுள்ளார் தனுஷ். வட சென்னையை சேர்ந்த கதை என்பதால் அதற்கு தேவா பொறுத்தமாக இருப்பார் என தனுஷ் நினைத்தாராம். ஆனால் தன்னால் வசனங்களை சரியாக பேச முடியாது எனக் கூறி அந்த வாய்ப்பை மறுத்துள்ளார் தேவா. இதை சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார் தேவா.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்