ஜெய்பீம் படத்திற்கு விருது தராதது ஏன்? – வறுத்தெடுக்கும் சினிமா பிரபலங்கள்!

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (16:02 IST)
நேற்று சினிமாவிற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஜெய்பீம் படத்திற்கு விருது அளிக்காதது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.



ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களுக்கு இந்திய அரசின் தேசிய விருது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டின் சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் ஆர்.ஆர்.ஆர், காஷ்மீர் பைல்ஸ், கடைசி விவசாயி உள்ளிட்ட பல படங்கள் இடம் பெற்றிருந்தன.

ஆனால் தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த கர்ணன், ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் எந்த விருதும் பெறவில்லை. இதனால் தேசிய விருது மீது பல்வேறு விவாதங்கள் கிளம்பியுள்ளது. ஜெய்பீம் படத்திற்கு விருது கிடைக்காதது குறித்து தெலுங்கு நடிகர் நானி தனது இன்ஸ்டாகிராமில் வருத்தம் தெரிவிக்கும் வகையில் ஸ்டோரி வைத்துள்ளார்.

ஜெய்பீம் படத்திற்கு விருது அளிக்காதது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ”ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது கொடுக்காததற்கு ஏதேனும் காரணம் உள்ளதா அல்லது இந்தியாவின் குரல், அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்