ஜகமே தந்திரம் படத்தில் அவர் பாணியில்தான் நடித்துள்ளேன்… தனுஷ் ஓபன் டாக்!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (07:56 IST)
நடிகர் தனுஷ் ஜகமே தந்திரம் படத்தில் ரஜினி ஸ்டைலில் நடித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ  மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளை இப்போது படக்குழு தொடங்கியுள்ள நிலையில் அமெரிக்காவில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக நேர்காணல்கள் அளித்து வருகிறார் தனுஷ். அப்போது அவர் ‘ஜகமே தந்திரம் படத்தில் ரஜினி பாணியிலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளேன்’ எனக் கூறி தன் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பை ஏற்றியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்