’எங்க ஏரியா உள்ள வராதே’: ஷாருக் கானை வெச்சு செஞ்ச டிஜே!

புதன், 11 ஏப்ரல் 2018 (11:57 IST)
ஷாருக் கான் ஸ்டேடியத்துக்குள் நுழையும்போது, தனுஷ் பாடலை ஒலிக்கச் செய்துள்ளார் டிஜே.
 
ஐபிஎல் 2018 கிரிக்கெட் போட்டி, கடந்த சனிக்கிழமை தொடங்கியது. சென்னையில் நேற்று முதல் மேட்ச் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் நேற்று சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மேட்ச் நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
 
இந்த மேட்சைக் காண, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான ஷாருக் கான் வந்திருந்தார். அவர் பெவிலியனுக்குச் செல்லும்போது, ‘எங்க ஏரியா உள்ள வராதே…’ என்ற தனுஷின் ‘புதுப்பேட்டை’ படப் பாடலை ஒலிக்கவிட்டார் டிஜே. இதனால், அங்கிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஆரவாரக் கூச்சலிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்