காலியாக இருக்கும் சேப்பாக்கம்: ஐபிஎல் நிர்வாகிகள் அதிர்ச்சி!

செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (19:03 IST)
காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் பல்வேறு தரப்பினரால் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட கூடாது என எதிர்ப்புகள் வலுத்தன.
 
இந்நிலையில், இன்று சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே போட்டி 8 மணிக்கு நடைபெறவுள்ளது. ஆனால், இந்த போட்டி நடைபெற கூடாது என்பதற்காக சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி போராட்டங்கள் நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தினர்.
 
போலீஸார் நடத்திய தடியடிக்கு பின்னர் போராட்டகாரர்கள் கலைத்துவிடப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குனர் பாரதிராஜா, சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில் இந்த சம்பவத்தால் சேப்பாக்கம் மைதானம் காலியாக காணப்படுகிறது. 40,000 பேர் அமரக்கூடிய மைதானத்தில் சில நூறு பேரே உள்ளனர். இதனால் ஐபிஎல் நிர்வாகம் அதிர்ச்சியில் உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்