சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ரூ.10 என பகல்கொள்ளை

செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (19:30 IST)
இன்னும் சற்றுநேரத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு பலத்த எதிர்ப்புகளுக்கு இடையிலும் ரசிகர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இருப்பினும் இன்னும் மைதானத்தின் பல இருக்கைகள் காலியாக உள்ளது.
 
இந்த நிலையில் இன்று போட்டியை பார்வையிட வரும் ரசிகர்கள் உணவுபொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு வரக்கூடாது என்ற நிபந்தனை உள்ளது. இதனை பயன்படுத்தி மைதானத்தின் உள்ளே உள்ள கடைக்காரர்கள் பகல்கொள்ளை அடித்து வருகின்றனர்.
 
குறிப்பாக ஒரு டம்ளர் தண்ணீர் ரூ.10 என விற்பனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதேபோல் உணவுப்பொருட்கள், ஸ்னாக்ஸ்கள் விலையும் பலமடங்கு உயர்ந்திருப்பதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் காவிரி தண்ணீருக்காக போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் நிலையில் மைதானத்தின் உள்ளே தண்ணீரை வைத்து பகல் கொள்ளையை நம்மவர்களே அடிப்பது முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளதாக நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்