இளையராஜா இசையில் பாடும் தனுஷ்

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (11:35 IST)
நடிகர் தனுஷ் சினிமாவின் பல துறைகளிலும் புகுந்து பல சாதனைகள் செய்து வருகிறார். பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல பன்முக திறமைகளை  வெளிப்படுத்தி வருகிறார். மேலும் அவர் ஹாலிவுட் படமான 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது  இளையராஜவின் இசையில் மராத்தி மொழியில் ஒரு பாடலை பாடவுள்ளாராம்.
தனுஷ், அனிருத் கூட்டணியில் பாடிய 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் மிகவும் பிரபலமானது. தமிழில் 'காதல் என் காதல்', 'ஜோடி நிலவே' உள்ளிட்ட ஹிட்டான  சில பாடல்களையும் பாடியிருக்கிறார். தற்போது, பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி 2' படத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில்  இளையராஜா ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
 
இந்நிலையில் தனுஷுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் இளையராஜா. மராத்தியில், அமோல் படவ் இயக்கும் 'பிலிக்கர்' என்ற படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இதில் தனுஷை ஒரு பாடல் பாட வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இளையராஜா.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்