தமிழ் திரை உலகில் ரூ.300 கோடி, ரூ.500 கோடி என பட்ஜெட்டில் படம் எடுத்து, தலையில் துண்டை போட்டுக்கொண்டு செல்லும் தயாரிப்பாளர்களுக்கு மத்தியில், வெறும் ரூ.7 கோடி பட்ஜெட்டில் உருவான 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் ரூ.75 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து, ஷங்கர் போன்ற பிரம்மாண்டமான படங்களை இயக்கும் இயக்குநர்கள், 'டூரிஸ்ட் பேமிலி' படக்குழுவினரிடம் பாடம் படிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியானது. இது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதே தேதியில் வெளியான சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் தோல்வி அடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில், 'டூரிஸ்ட் பேமிலி' படம் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.