ரஜினி குடும்பத்தினர் யாரும் கஸ்தூரியிடம் பேசவில்லை… மக்கள் தொடர்பாளர் பதில்!

வியாழன், 1 ஜூலை 2021 (10:02 IST)
ரஜினி அமெரிக்கா சென்றது எப்படி என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பும் விதமாக ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார்.

கொரோனா தடுப்பு ஊசி செலுத்திக் கொண்ட ரஜினிகாந்த் சிறப்பு அனுமதி பெற்று உடல் பரிசோதனைக்காக தனி விமானம் மூலம் சமீபத்தில் அமெரிக்கா சென்றுள்ளார். மருத்துவ பரிசோதனை முடிந்து மூன்று வார காலம் அமெரிக்காவில் தங்கிய பின்பு சென்னை திரும்புவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஆகிய இருவரும் அமெரிக்காவில் ஒரு ஹோட்டலின் முன் நடந்து வருவது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

அமெரிக்கா சென்ற ரஜினியின் குறித்த அப்டேட் வேண்டுமென்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது ரஜினியின் புகைப்படம் ஆறுதல் அளிப்பது போலுள்ளதாக ரசிகர்கள் பேசி வந்தனர்.  இந்நிலையில் நடிகை கஸ்தூரி நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றது குறித்து, ஒரு கேள்வி எழுப்பியுள்ளார்.  இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:  கொரொனா இரண்டாம் அலை காரணமாக கடந்த மே மாதம் முதல் இந்தியர்கள் அமெரிக்காவுக்குச் செல்ல தடைவிதிக்கபப்ட்டுள்ள நிலையில்,  ரஜினி மட்டும் அமெரிக்காவுக்குச் சென்றது எப்படி எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில் பின்னர் அவரே மற்றொரு டிவிட்டில் ‘அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள். ஆச்சரியம் கலந்த நன்றி ! நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது. நல்ல செய்தி- நானே முதலில் சொல்கிறேன். பூரண நலமுடன் புது பொலிவுடன் 'தலைவரை' வரவேற்க தயாராகட்டும் தமிழகம் !’ எனக் கூறியிருந்தார். ஆனால் கஸ்தூரியின் இந்த தகவலை முற்றிலுமாக மறுத்துள்ள ரஜினியின் பி ஆர் ஓ ரியாஸ் அகமது . அவர் தன்னுடைய டிவீட்டில் ‘தலைவரோ ,தலைவர் குடும்பத்திலிருந்து யாரும் பேசவில்லை , எந்த விதமான விளக்கமும் கொடுக்க வில்லை என்பது தான் நிஜம்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்