இயக்குனரின் திரைக்கதையைப் படித்துவிட்டு தனுஷ் அனுப்பிய ஒற்றைவார்த்தை!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (16:33 IST)
நடிகர் தனுஷ் ராம்குமார் இயக்கத்தில் வால் நட்சத்திரம் என்ற சை பை படத்தில் நடிக்க உள்ளார்.

முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் ஆகிய படங்களின் இயக்குனர் ராம்குமார் இயக்க தனுஷ் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்தார். இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க இருந்தது. இந்த படம் பற்றிய அறிவிப்பு ஓராண்டுக்கு முன்னரே வெளியானது. ஆனால் இன்னமும் அந்த படம் தொடங்கப்படவில்லை. அதற்கான காரணம் இயக்குனர் ராம்குமார்தானாம். அந்த படம் ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் படம் என்பதால் திரைக்கதைக்காக ஒரு ஆண்டுக்கும் மேலாக எடுத்துக் கொண்டாராம் ராம்குமார்.

இந்நிலையில் இப்போது முழு திரைக்கதையையும் முடித்துள்ள ராம்குமார், திரைக்கதையை அமெரிக்காவில் இருக்கும் தனுஷுக்கு அனுப்பி வைத்துவிட்டு தனுஷின் பதிலுக்காக காத்திருந்தார். இந்நிலையில் அமெரிக்காவில் படத்தின் திரைக்கதையைப் படித்த தனுஷ் சூப்பர் என்ற ஒற்றை வார்த்தையில் திரைக்கதையை பாராட்டியுள்ளாராம். இதனால் விரைவில் படத்துக்கான பணிகள் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்