மணிகண்டன் நடித்த குட்நைட் திரைப்படம் இந்த ஆண்டு வெளியான மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்று என்ற நிலையில் மணிகண்டன் நடித்த அடுத்த திரைப்படமான லவ்வர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படம் வரும் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
மணிகண்டன் மற்றும் ஸ்ரீ கௌரி பிரியா ஆகிய இருவரும் கல்லூரி காலத்தில் இருந்து காதலித்து வரும் நிலையில் திடீரென இருவருக்கும் ஒரு பிரச்சனை ஏற்பட அந்த பிரச்சனைக்கு என்ன காரணம்? பிரச்சனை முடிவுக்கு வந்து மீண்டும் இணைந்தார்களா? என்பதை விறுவிறுப்பாக கூறி இருக்கும் திரைக்கதை தான் இந்த படம்.
மணிகண்டன் குட்நைட் போலவே இந்த படத்திலும் நடிப்பில் அசத்தியுள்ள நிலையில் கண்டிப்பாக இந்த படமும் அவருக்கு இன்னொரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபுராம் வியாஸ் இயக்கத்தில், சீன் ரோல்டான் இசையில், ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில், பரத் விக்ரமன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் மணிகண்டன், ஸ்ரீ கௌரிப்ரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.