ரசிகர்களுக்கு அஜித் கூறிய அட்வைஸ்: சுரேஷ் சந்திரா டுவிட்

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2022 (13:21 IST)
நடிகர் அஜித் தனது ரசிகர்களுக்கு சொல்ல வேண்டிய கருத்துக்களை தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் அவ்வப்போது கூறி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.
 
அந்தவகையில் சற்றுமுன் சுரேஷ் சந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித் அறிவுரை கூறியதாக ஒரு பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
 
உங்களை சுற்றி பாசிட்டிவான நபர்களையும், உங்களை ஊக்கப்படுத்தும் நபர்களை மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள். நெகட்டிவிட்டி வேண்டவே வேண்டாம். பெரிய லட்சியங்களை அடைய முயலுங்கள்’ என  கூறியுள்ளார்.
 
கடந்த சில நாட்களாக வாரிசு மற்றும் துணிவு ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதை அடுத்து அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வதை அடுத்து அஜீத்தின் அறிவுரையின் பேரில் அவரது மேனேஜர் இந்த ட்விட்டை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்