அவதார் படத்தின் தமிழ் போஸ்டர் ரிலீஸ்… இணையத்தில் வைரல்!

புதன், 16 நவம்பர் 2022 (16:00 IST)
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரும் வசூலை அள்ளி குவித்த படம் ‘அவதார்’. இன்று வரை உலக அளவில் அதிகம் வசூல் செய்த ஹாலிவுட் படம் என்ற பெருமையும் அவதார் வசம் உள்ளது. இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 16ம் தேதி ‘அவதார்; தி வே ஆப் வாட்டர்’ வெளியாக உள்ள நிலையில் இது மிகப்பெரிய வசூல் சாதனை படைக்குமா என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

உலகமெங்கும் 160க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த படம் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் தமிழ் பதிப்பின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்