கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (15:46 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.  இப்போது முக்கியமானக் காட்சிகளை தென்காசி அருகே படக்குழு படமாக்கி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விறுவிறுப்பாக இப்போது ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் ஏப்ரல் மாத இறுதியில் மொத்த ஷூட்டிங்கும் முடிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படத்தை இந்த ஆண்டு இறுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்