நான் கதைக்கேட்டெல்லாம் பாட்டு போடுவதில்லை… அனிருத் ஓபன் டாக்!

vinoth

செவ்வாய், 6 மே 2025 (08:29 IST)
தமிழ் சினிமாவில் தற்போது அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார் அனிருத். இதன் காரணமாக முன்னணி நடிகர்கள் படங்களுக்கு மட்டும்தான் அவர் இசையமைத்து வருகிறார். தமிழ் தாண்டியும் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

தற்போது தமிழில் ரஜினிகாந்தின் ‘கூலி’ மற்றும் ‘ஜெயிலர் 2’ ஆகிய படங்கள் அவர் கைவசம் உள்ளன. படங்களுக்கு இசையமைப்பது போலவே தொடர்ந்து பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் அவர் பகிர்ந்துள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது. அதில் “நானும் என் குழுவினரும் தினமும் எப்படியாவது ஒரு பாடலை உருவாக்குகிறோம். அதனால் நாங்கள் உருவாக்கிய 85 சதவீதப் பாடல்கள் கதைக் கேட்காமலேயே நாங்களாக உருவாக்கியதுதான். இது தவறான முறைதான். ஆனால் அப்படிதான் நான் இசையமைத்து வருகிறேன்” எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்