விவாகரத்து முடிவைக் கைவிடுகிறார்களா தனுஷ்- ஐஸ்வர்யா?

Webdunia
புதன், 5 அக்டோபர் 2022 (09:55 IST)
நடிகர் தனுஷ் சில மாதங்களுக்கு முன்னர் தனது விவாகரத்து முடிவை அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா 18 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த தனுஷை காதல் திருமணம் செய்துகொண்டார். தனுஷை விட ஐஸ்வர்யாவுக்கு 2 வயது அதிகம் என்பதால் அப்போது அவர்களின் திருமணம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.

அவர்களின் மணவாழ்க்கையில் யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இரு மகன்கள் அவருக்கு இருக்கின்றனர். இந்நிலையில் 18 ஆண்டுகளாக நீடித்து வந்த மணவாழ்க்கையை சுமூகமாக முடித்துக் கொள்வதாக இருவரும் சமீபத்தில் அறிவித்தனர். இந்த அறிவிப்பு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றது. இதையடுத்து இரு வீட்டாரும் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது இருவரின் குடும்பத்தினரும் நடத்திய பேச்சுவார்த்தையில் இப்போது சுமூகமான முடிவு ஏற்பட்டு இருவரும் மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்