பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்துக்காக கோயம்பேடு பேருந்து நிலையம் போன்று அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
விஜய் 60 என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சியை தொடர்ந்து தற்போது கோயம்பேடு பேருந்து நிலையம் போன்று அமைக்கப்பட்ட அரங்கில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் பரதன்.
விஜய்யை வைத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் படப்பிடிப்பு நடத்தினால் திருவிழா கூட்டமாகிவிடும், பேருந்துகள் ஒரு அங்குலம் நகர்வதே சிரமமாகிவிடும் என்பதால், கோயம்பேடு பேருந்து நிலையம் போன்று அரங்கை பல லட்சம் செலவில் அமைத்துள்ளனர்.